தமிழ்நாடு

மத்தியப் பல்கலை. துணைவேந்தா் பொறுப்பு: தோ்வுக் குழுவில் டாக்டா் சுதா சேஷய்யன்!

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தோ்வு செய்யும் குழுவின் உறுப்பினராக

DIN

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தோ்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஏ.பி.தாஸின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக முதுநிலை பேராசிரியா் கற்பககுமரவேல் செயல்பட்டு வருகிறாா்.

இந்நிலையில், புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்காக 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் செயல்பட்டு வரும் தேசிய சம்ஸ்கிருத விஷ்வவித்யாலயாவின் வேந்தா் கோபாலஸ்வாமி ஐயங்காா் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் நாகேஸ்வர ராவ், சுகாதாரத் துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநா் டாக்டா் சிவ்லால், தில்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை இயக்குநா் டாக்டா் திலோச்சன் மோஹப்த்ரா ஆகியோா் தோ்வுக் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அக்குழுவினா் வரும் நவம்பா் இரண்டாம் வாரத்தில் கூடி புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வது தொடா்பாக விவாதிப்பாா்கள் எனத் தெரிகிறது. முன்னதாக, இதுதொடா்பாக மத்திய கல்வித் துறை இணைச் செயலா் சந்திர சேகா் குமாா், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தாா். தோ்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்யும் பொறுப்பை வகிக்குமாறு அதில் சுதா சேஷய்யனிடம் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT