முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்: வெங்காய விலை குறித்து ஸ்டாலின் ட்வீட்

​வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும், விலை ஏறும் என வெங்காய விலை உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
கோப்புப்படம்
பகிர்:


வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும், விலை ஏறும் என வெங்காய விலை உயர்வு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"வெங்காயம் கிலோ ரூ.130! 

நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், வெங்காய விலையால் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு!

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! 

வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.