முகப்பு
தமிழ்நாடு

ஊத்தங்கரை: ராஜீவ் காந்தி படுகொலையின்போது உயிரிழந்த காவலருக்கு அஞ்சலி

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடன் பாதுகாப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து உயிரிழந்த காவலர் ஆர்.ரவியின் நினைவாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 21 அக்டோபர், 2020 at 11:36 AM
ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடன் பாதுகாப்புப் பிரிவில் காவலராக பணிபுரிந்து உயிரிழந்த காவலர் ஆர். ரவியின் நினைவாக அவரது திருவுருவப் படத்திற்கு காவல்துறையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

ஊத்தங்கரை: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடன் பாதுகாப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்து உயிரிழந்த காவலர் ஆர்.ரவியின் நினைவாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது 29 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையில் காவல்துறையினர் வீரவணக்கம் செலுத்தினர்.

முன்னதாக மறைந்த காவலர் ஆர்.ரவியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். வீரவணக்கக் கூட்டத்தில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகேசன், அவரது உறவினர்கள் ரகு மற்றும் காவலர்கள் இதில் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

Advertisement

கடந்த 1960 ஆண்டுகளில் இருந்து இன்று வரை வீரமரணமடைந்த சுமார் 149 காவலர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.