முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: மகனூர்பட்டி ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை

ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

Updated On : 22 அக்டோபர், 2020 at 1:26 PM
மகனூர்பட்டி ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரியின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம், தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 80 லட்சம் என மொத்தம் இரண்டு கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் வேடி, தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ. சி. தேவேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், நகரச் செயலாளர் பி .கே. சிவானந்தம், மகனூர்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கலில், சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சங்கரநாராயணன், தள்ளப் பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செந்தமிழ் செல்வன், வடக்கு ஒன்றிய தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் லோகநாதன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் ஒப்பந்ததாரர் கண்ணன், குன்னத்தூர் பெருமாள் மற்றும் அதிமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.