தமிழ்நாடு

மருதூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி தொடக்கம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக  226 பேருக்கு நிகழ் பருவக்கால நெற்பயிர் சாகுபடிக்கு ரூ. 64 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் மு.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கிச் செயலர் எஸ்.சேகர், கூடுதல் செயலர் அசோகன், இயக்குநர்கள் உதயம்.முருகையன், இந்திராணி சுப்ரமணியன், சா.இந்திரா, ப.சிங்காரவேல், கோபு, பிச்சக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT