தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

விஜய் மக்கள் இயக்கம்  நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார். 

DIN



சென்னை: விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார். 

விஜய் மக்கள் இயக்கம் உரிய நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என அவரது தந்தை சந்திரசேகர் கூறியிருந்த நிலையில், சென்னை அருகே உள்ள பனையூர் இல்லத்தில்  தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனையில் நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனையில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று அரையிறுதியில் பலப்பரீட்சை

ரூ. 9.50 லட்சத்தில் சாலை பணிக்கு பூமி பூஜை

சென்னையில் ஆண்டுதோறும் 10,000 பேருக்கு பக்கவாத பாதிப்பு

மாற்றம் காணாத தொழிலக உற்பத்தி வளா்ச்சி

கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிடத் தயங்குவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT