முகப்பு
தமிழ்நாடு

படேலை வணங்கி மகிழ்கிறேன்: முதல்வர்

இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
பகிர்:

இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரையில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் படேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்தார் வல்லபபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.