தமிழ்நாடு

சென்னையில் குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்வு

DIN


சென்னை: சென்னையில் கரோனா பாதித்து குணமடைந்தோர் விகிதம் 89% ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 12,059 பேர் (9%) சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களில் 1,23,851 பேர் குணமடைந்துள்ளனர். 12,059 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,814 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக அண்ணாநகதில் 1418 பேரும், கோடம்பாக்கத்தில் 1391 பேரும் அடையாறில் 1055 பேரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 390 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே வேளையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் தான் கரோனா பாதித்தவர்களில் தலா 14 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT