முகப்பு
தமிழ்நாடு

மூலனூரில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
மூலனூரில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஊத்துக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல்(50). இவரது பழைய வீடு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ஜன்னல், கதவுகள் சரிவர அடைக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லை. சக்திவேல் மூலனூர் சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது, உள்ளே இருந்து இரண்டு பேர் தப்பி ஓடியுள்ளனர். வீட்டுக்குள் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரூபாயை காணவில்லை.
இதையடுத்து, சக்திவேல் மூலனூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனே, தேடுதல் வேட்டையைத் துவக்கிய போலீஸார் ஒருமணி நேரத்தில் பணத்தை திருடிய இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.