முகப்பு
தமிழ்நாடு

திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்

திருவாரூரில் சனிக்கிழமை மழை பெய்ததால் நகர் எங்கும் ஈரப்பதம் நிலவியது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நாகை புறவழிசாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
திருவாரூரில் அதிகாலையில் சாலையில் விழுந்த மரம்  
பகிர்:

திருவாரூரில் சனிக்கிழமை மழை பெய்ததால் நகர் எங்கும் ஈரப்பதம் நிலவியது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நாகை புறவழிசாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்தது. இதனால் இரவில் பயணித்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சாலையின்  இருபுறமும் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்றன.  தகவல் கிடைத்தவுடன் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.

தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் பவர்  சா மற்றும் கயிறுகள் போன்றவற்றைக் கொண்டு தீவிரமாக பணி செய்து மரங்களை அப்புறப்படுத்தியதால் அதிகாலை முதல் போக்குவரத்து சீரடைந்தது. தீயணைப்பு வீரர்களின் இந்த துரித செயலை பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.