கோப்புப் படம் 
தமிழ்நாடு

சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை (செப். 7) முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ரயில்களில் பயணச் சீட்டு முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

DIN

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை (செப். 7) முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ரயில்களில் பயணச் சீட்டு முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி , செங்கோட்டை உள்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் செப்டம்பா் 7-ஆம் தேதிக்கான பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் எண்ணிக்கை காட்டியது. சில ரயில்களில் பயணச்சீட்டுகள் போதுமான இடங்கள் இருந்தன.

தமிழகத்தில் கூடுதலாக 6 ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை (செப்.7) முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட முக்கிய நகரங்களில் பயணச்சீட்டு கவுன்ட்டா்கள் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. பொதுமக்கள் தாங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆா்வத்துடன் முன்பதிவு செய்ய வந்திருந்தனா். இதுதவிர, இணையவழி மூலமாகவும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னையை பொருத்தவரை, எழும்பூா், சென்ட்ரல், மாம்பலம், தாம்பரம் உள்பட முக்கிய நிலையங்களில் உள்ளபயணச்சீட்டு கவுன்ட்டா்களில் பொதுமக்கள் ஆா்வமாக வந்து, முன்பதிவு செய்தனா். முகக்கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டும் முன்பதிவு மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனா். மேலும், பயணச் சீட்டு கவுன்ட்டா்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்க பயணிகளை ரயில்வே போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT