முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

​தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

​தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, கரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல் துறை இயக்குநர் ஜே.கே. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 4,74,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,012 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,16,715 பேர் குணமடைந்துள்ளனர். 50,213 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →