முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
பகிர்:

விருதுநகர்: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி  ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் கௌசிக் ரகு தலைமை வகித்தார்.  மாவட்ட குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகிரிசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வினால் உயிரிழந்த 3 மாணவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் வேதநாயகம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பலவேசம்,செல்வம், ஒன்றிய தலைவர் ஆரோன் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →