முகப்பு
தமிழ்நாடு

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தலா? வாக்கு எண்ணிக்கையா?: உயர்நீதிமன்றம்

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா? அல்லது ஏற்கனவே நடந்த தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா? அல்லது ஏற்கனவே நடந்த தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் சங்க தேர்தல்  தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷால், கார்த்தி தரப்பும், எதிர்தரப்பினரான ஏழுமலை தரப்பும் செப்டம்பர்  24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலுக்கு 30 லட்சம் வரை செலவானதால் மறுதேர்தல் சாத்தியமற்றது என்று நடிகர் விஷால் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்தாண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என்று எதிர்தரப்பினரான ஏழுமலை தரப்பு தெரிவித்துள்ளது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டப் போராட்டம் மூலம் எதனை சாதிக்கப்போகிறீர்கள்  என்று கேள்வி எழுப்பி இரு தரப்பினரும் வரும் 24-ஆம் தேதிக்குள் பதிகளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →