மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,458 கன அடியிலிருந்து 13,001 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,458 கன அடியிலிருந்து 13,001 கன அடியாக குறைந்துள்ளது.
வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 14,458 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 13,001 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.35 அடியாக இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18 ஆ.யிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுளளது.
ஆணையின் நீர் இருப்பு 55.24 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.