முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 9,706 பேர் கரோனா சிகிச்சையில்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 55,639- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,058 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 12:43 PM
சென்னையில் 9,706 பேர் கரோனா சிகிச்சையில்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 55,639- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 3,058 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் 1-ஆம் தேதி 15,770-ஆகவும், 6-ஆம் தேதி 20,993-ஆகவும், 14-ஆம் தேதி 30,444-ஆகவும், 24-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகவும் அதிகரித்தது.

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது.

Advertisement

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 55,639-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 42,875 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 9,706 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,058- ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகரிலும், கோடம்பாக்கத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேல் நீடிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அதிக பாதிப்புகளைக் கண்டு வந்த அம்பத்தூர், அடையாறு மண்டலங்களில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.