கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா பாதிப்பு
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் சிகிச்சைக்காக சென்னை தனியார் (மியாட்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
எம்.எல்.ஏ.வுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களான மனைவி மற்றும் 2 மகள்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.