முகப்பு
தமிழ்நாடு

மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பகிர்:


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் பிறந்தநாளையொட்டி, தொலைபேசி மூலமாக அவரைத் தொடர்புகொண்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், சுட்டுரையில் வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!

அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும், எதிர்காலத் திட்டங்களும் உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.