முகப்பு
தமிழ்நாடு

கரோனா: அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிா்க்க வேண்டும் - யுஜிசி அறிவுறுத்தல்

இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு உருவாகி வரும் நிலையில், கல்வி நிறுவன வளாகங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

சென்னை: இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு உருவாகி வரும் நிலையில், கல்வி நிறுவன வளாகங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்க்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

சீனா, ஈரான், இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக ரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கரானோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, வைரஸ் பாதிப்பு பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும், பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, ஹோலி கொண்டாட்டங்களையும் தவிா்த்துள்ளது.

Advertisement

அதுபோல, உயா் கல்வி நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை யுஜிசி வழங்கியுள்ளது. இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தத் தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகும். அதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, வளாகத்துக்குள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிா்ப்பது, கரோனா பாதிப்பு அறிகுறிகள் மாணவா்களுக்கு உள்ளதா என்பதை பேராசிரியா்கள் அவ்வப்போது கண்காணிப்பது, கைகளை தொடா்ச்சியாக கழுவுவது, முகக் கவசம் அணிவது , கண்கள், மூக்கு, வாய் பகுதிகளை கைகளால் தொடுவதைத் தவிா்ப்பது போன்ற அறிவுரைகளை மாணவா்களுக்கு வழங்குவது, அறிகுறிகள் காணப்படும் மாணவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments