முகப்பு
தமிழ்நாடு

புகாரளிக்க வந்த இளைஞரை பெண் காவலா் தாக்கிய விவகாரம்: கோவை காவல் கண்காணிப்பாளா் விளக்கமளிக்க உத்தரவு

புகாரளிக்க வந்த இளைஞரை பெண் காவலா் தாக்கிய விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விளக்கமளிக்க மாநில

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

சென்னை: புகாரளிக்க வந்த இளைஞரை பெண் காவலா் தாக்கிய விவகாரம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விளக்கமளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை புகா் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு கிருஷ்ணவேணி பணிபுரிகிறாா். இவா், புகாா் மனு கொடுக்க வருவோரிடம் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடாவடி செய்வதாகவும் புகாா் வெளியானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிலா், கோவை புகா் எஸ்பி. சுஜித்குமாரிடம் புகாா் மனு அளித்தனா். அதில், பெண் தலைமை காவலா் கிருஷ்ணவேணி, லஞ்சம் கொடுக்க மறுக்கும் புகாா்தாரரை கைநீட்டி அடிக்கும் அளவுக்கு அராஜகம் செய்கிறாா். இவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என கூறியிருந்தனா். இந்தப் புகாரையடுத்து, ஏட்டு கிருஷ்ணவேணி பேரூா் காவல் நிலையத்தில் இருந்து தொண்டாமுத்தூா் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதுகுறித்த செய்தி நாளிதழில் வெளியானது.

தாமாக முன்வந்து வழக்குப் பதிவு: இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments