சென்னையில் தகரம் அடிப்பது நிறுத்தம்: சென்னை மாநகராட்சி
சென்னையில் கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் தற்போது 90 நாள்களுக்கு மேலாகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு தெருவில் 2 அல்லது 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வருகிறோம்.
கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் சென்னை மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது தீவிரமாக இருந்தது. ஆனால், முன்பை விட தற்போது அலட்சியம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடித்து மூடப்பட்டு வந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.