தமிழகத்தில் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,579 கோடி
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், கடந்த மார்ச் மாதம் ரூ.7579.18 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், கடந்த மார்ச் மாதம் ரூ.7579.18 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579.18 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான 6,177.82 கோடியைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.