காமாட்சியம்மன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
தீவிர அரசியலிலிருந்து ஒதுங்குவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சனிக்கிழமை வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சென்று மகாப்பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக காமாட்சி அம்மன் கோவில் நுழைவுவாயிலில் அமமுக வேட்பாளர்கள் ஆர்வி ரஞ்சித்குமார் என் மனோகரன் ஆகியோர் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இவர்களைத் தவிர அமமுக தொண்டர்கள் பலரும் திரண்டு வந்து சசிகலாவை வரவேற்றனர். தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில் வருங்கால முதலமைச்சர் என்று எழுதப்பட்ட புகைப்படமும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது.