முகப்பு
தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கவச உடையில் கனிமொழி
பகிர்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

பின்னா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். 

Advertisement

அடுத்த 5 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று மாலை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கனிமொழி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments