முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஏப். 14 - 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா 

தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
தமிழகத்தில் ஏப். 14 - 16-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா
பகிர்:

தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, 

8.4.2021 வரை, 4,58,969 சுகாதாரப் பணியாளர்கள், 5,61,531 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 9,21,050 நபர்கள், 45- 59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 70,216 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 11,14,270 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இரண்டாம் தவணை தடுப்பூசி 2,12,517 சுகாதாரப் பணியாளர்கள், 81,685 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 25,804 நபர்கள் 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 100 நபர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 40,894 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒரு காலவரையறைக்குள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியையும் முடிக்க முடிவெடுக்கப்பட்டது. 

குறிப்பாக 14 ஏப்ரல் 16 ஏப்ரல் வரை அந்தந்த மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையும் எடுக்க முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →