மேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் முடிதிருத்தும் செய்யும் தொழிலாளியான இவருக்கு மாற்றுதிறனாளியான பாத்திமா மேரியை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா மேரி தனது கணவர் ராமச்சந்திரனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகின்றார்.
கணவனின் தாயார் அஞ்சலை மீதும் குடும்ப பிரச்னை எழுந்த நிலையில் கணவன் வீட்டார் கொடுமைப் படுத்துவதாகவும், கணவனின் வீட்டை தனக்கு மீட்டு தரக்கோரி மேலூர் 15 நாள்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் பாத்திமாமேரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் காவல்நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கு பணியிலிருந்த காவல்துறையினர் துரிதமாக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றித் தடுத்துக் காப்பாற்றினார். பின்னர் அங்கு வந்த மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மகளிர் காவல்நிலையம் முன்னே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.