முகப்பு
தமிழ்நாடு

திருப்பூர் அருகே தாய், மகன், மகள் தற்கொலை 

திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
திருப்பூர் அருகே தாய், மகன், மகள் தற்கொலை 
பகிர்:

திருப்பூர்: திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன்,மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50), இவரது மனைவி மீனாட்சி (47), இந்தத் தம்பதிக்கு அஸ்வின் (19) என்கிற மகனும்,அகல்யா (17) என்கிற மகளும் உள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ராகவன் இறந்துவிட்டார். இதனால் மீனாட்சி உள்பட மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்தாகத் தெரிகிறது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை இரவு மீனாட்சி தனது தங்கை மகாலட்சுமியை செல்லிடப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு கணவர் இறந்துவிட்டதால் வாழப்பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். 

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்குளி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது மீனாட்சி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது முதலிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →