நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த இஸ்லாமியர்கள். 
தமிழ்நாடு

நாமக்கல்லில் இரவு நேர ரமலான் நோன்பு வழிபாட்டை அனுமதிக்க கோரி மனு

ரமலான் மாதத்தின் இரவு நேர வழிபாடுகளை 10 மணி வரை அனுமதிக்கக் கோரி இஸ்லாமியர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர். 

DIN

நாமக்கல்: ரமலான் மாதத்தின் இரவு நேர வழிபாடுகளை 10 மணி வரை அனுமதிக்கக் கோரி இஸ்லாமியர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர். 

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் முத்தவல்லிகளின் கூட்டமைப்பு சார்பில்  இந்த மனு  அளிக்கப்பட்டது.

அதில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் வரும் 13-ஆம் தேதி தொடங்க உள்ளது. இம்மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் விசேஷ கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவது இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய அம்சமாகும். கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது‌.

புனித ரமலான் மாதத்தின் இரவு நேர வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். 

மேலும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க மக்களிடம் அறிவுறுத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT