வேதாரண்யம் அருகே சாமி சிலை கண்டெடுப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்றில் மீன் பிடித்த போது இன்று கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றில் மீன் பிடித்த போது இன்று கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கரியாப்பட்டினம் செம்பியமணக்குடி பகுதியில் உள்ள மணக்காட்டான் வாய்க்காலில் மீன் பிடித்த போது, சிறிய அளவுள்ள உலோகச் சிலை சிக்கியது,
இந்த சிலை வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை என்பது தெரிய வந்தது. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.