தமிழ்நாடு

கரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை கைமீறிச் சென்று விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்  தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது. தற்போது கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத் தாண்டி, கைமீறிவிட்டது.

தமிழகத்தில் போதிய அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும், 40 வயதானவர்களுக்கும் விரும்பினால்  கரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT