தமிழ்நாடு

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN


ஏப்ரல் 27,28,30 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் 2021 தோ்வு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் தோ்வு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். 

இந்நிலையில், ஏப்ரல் 27,28,30 -ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT