முகப்பு
தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போட்டுக் கொண்டார் மு.க. ஸ்டாலின்
பகிர்:


சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்ட மு.க. ஸ்டாலின், குறிப்பிட்ட கால இடைவெளியில், இன்று இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் மு.க. ஸ்டாலின், இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். 

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!

நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →