முகப்பு
தமிழ்நாடு

அவிநாசியில் பேட்டரி கடையில் தீ விபத்து

அவிநாசி கோவை சாலையில் பேட்டரி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
அவிநாசியில் பேட்டரி கடையில் தீ விபத்து
பகிர்:

அவிநாசி கோவை சாலையில் பேட்டரி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவிநாசி கோவை சாலை சீனிவாசபுரம் பகுதியில் தனியார் பேட்டரி கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் கனரக வாகனங்கள் வீட்டுக்கு உபயோகிக்கக் கூடிய மின் மாற்றி  பேட்டரிகள் உள்பட அனைத்து ரக பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வது புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடையில் வெள்ளிக்கிழமை மதியம் திடீர் மின்கசிவு காரணமாக எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த அவிநாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.