தமிழ்நாடு

தமிழகத்துக்கு அவசரத் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN


சென்னை: தமிழகத்துக்கு 20 லட்சம் கரோன தடுப்பூசிகளை உடனே அனுப்ப பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கு அவசரத் தேவையாக 20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கேட்டு முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் குறைந்தபட்சம் 10 நாள்களுக்குத் தேவையான 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க வேணடும்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதைத் தவிர்க்க தமிழகத்துக்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்.

ஒரு சில மாநிலங்கள் ரெம்டெசிவிர் மருந்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தடுக்கும் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT