முகப்பு
தமிழ்நாடு

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

நாகையை அடுத்த நாகூரில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 26 ஏப்ரல், 2021 at 4:58 PM
பகிர்:

நாகையை அடுத்த நாகூரில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகையை அடுத்த நாகூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் புயல்மணி(69). இவரது மனைவி லட்சுமி(63). இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், லட்சுமிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவலறிந்த புயல்மணி மிகுந்த துயர் அடைந்துள்ளார். இதன் காரணமாக, அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டிலேயே புயல்மணியும் உயிரிழந்தார். இருவருக்கும் ஒன்றாகவே இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. 

Advertisement

கணவர், மனைவி இருவரும் இணை பிரியாமல் இறந்தது அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.