தமிழ்நாடு

தடுப்பூசி விலையைக் குறையுங்கள்!: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN


கரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா தடுப்பூசியின் அதிக விலையால் மாநிலங்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதாகவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு முழுவதும் 18 முதல் 45 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இதனால் வழக்கத்தை விட மாநிலங்களுக்குக் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும்.  தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மொத்தமாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை மாறுதலாகவுள்ளது. கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை வல்லுநர்கள் மூலம் ஆராய வேண்டும்.

மத்திய அரசே கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT