தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 
தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் ஏப். 29 ஆம் தேதி குடமுழுக்கு; பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் வருகிற 29 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

DIN

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. 

வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி வீற்றிருக்கிறார். 

இந்நிலையில், குடமுழுக்கை பக்தர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே தொலைக்காட்சி அல்லது யூட்யூப் மூலமாக கண்டுகளித்து இறைவன் ஆசி பெற வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். 

வருகிற 29 ஆம் தேதி(வியாழக்கிழமை) காலையில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் அளித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். பக்தர்கள் தொலைக்காட்சிகளிலும், யூட்ட்யூப் தளத்திலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கை பக்தர்கள் தங்கள் இல்லத்திலிருந்தே கண்டு கரோனா இந்த உலகத்திலிருந்து நீங்க வேண்டுமென பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

“சிறுத்தை சிக்கியது!” கால்நடைகளைத் தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்!

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

SCROLL FOR NEXT