சென்னை, நெல்லையில்தான் கரோனா உறுதியாகும் விகிதம் அதிகம் 
தமிழ்நாடு

சென்னை, நெல்லையில்தான் கரோனா உறுதியாகும் விகிதம் அதிகம்

தமிழகத்திலேயே சென்னை மற்றும் நெல்லையில்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

IANS


சென்னை: தமிழகத்திலேயே சென்னை மற்றும் நெல்லையில்தான் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மிக அதிகமாக கரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் கரோனா உறுதியாவோர் விகிதம் சென்னையில் 20 சதவீதமாகவும், அதற்கடுத்த இடத்தில் நெல்லையில் 17 சதவீதமாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தின் தலைநகர் சென்னையில், 100 பேர் கரோனா பரிசோதனை செய்து கொண்டால், அவர்களில் 20 பேருக்கு கரோனா உறுதியாகிறது. இது போல, நெல்லையில் 17 பேருக்கு கரோனா உறுதியாகிறது. தூத்துக்குடியில் 16 பேருக்கும், தென்காசியில் 14.2 பேருக்கும் கரோனா உறுதியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 40 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது நாட்டில் முதல் முறையாக கரோனா கண்டறியப்பட்ட 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு சென்னையில் பதிவாகும் மிக அதிக பலி எண்ணிக்கையாகும்.

இதுபோல, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT