முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர்கள் வருகையையொட்டி சங்ககிரியில் சிதலமடைந்த சாலைகள் சீரமைப்பு 

ஆக.3ல் தீரன் சின்னமலை நினைவு தினத்தில் அமைச்சர்கள் வருகையையொட்டி சங்ககிரியில் சிதலமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் சிதலமடைந்த கான்கீரிட் சாலையை தற்காலிகமாக செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ள சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள்.
பகிர்:

சங்ககிரி: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ம் தேதி  செவ்வாய்க்கிழமை அனுஷ்டரிக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் அரசின் சார்பில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்த சங்ககிரிக்கு வருகை தரஉள்ளனர். 

இந்நிலையில் சங்ககிரி மலையடிவாரத்தில் இருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் கான்கீரிட் சாலை பேரூராட்சியின் சார்பில் திடீரென்று தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கும் பணியில் சங்ககிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் இரத்தினச் சர்க்கரை, பெரியாத்தாள் தம்பதியருக்கு 2வது மகனாக 1756ம் ஆண்டு தீர்த்தகிரி என்னும் தீரன் சின்னமலை பிறந்தார். அவர் 17 வயதிலிருந்து வெள்ளையருக்கு எதிராக பல்வேறு போர்களில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். பின்னர் சங்ககிரி மலைக்கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த திப்புசுல்தான் படையில் போர்படை தளபதியாக பொறுப்பேற்று வெள்ளையர்களை பலவகைகளிலும் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார். 

அவரை வெள்ளையர்கள் சூழ்ச்சியால்தான் பிடிக்க வேண்டும் என அவரிடம் பணியாற்றிய சமையல்காரன் மூலம் சூழ்ச்சி செய்து தீரன்சின்னமலையை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட அவர் சங்ககிரி மலை மீது 1805ம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம்தேதி தூக்கிலிடப்ப்டடார்.  

அதனையடுத்து ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18ம் தேதி தமிழகரசின் சார்பிலும், பல்வேறு கொங்கு அமைப்புகளும் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் சங்ககிரியில் தூக்கிலிடப்பட்ட  மலையின் அடிவாரப்பகுதியிலும், ஈரோடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள  தீரன் சின்னமலைக்கு நினைவு சின்னத்திலும் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

நிகழாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகரசின் சார்பில் அவரது நினைவு தினத்தில் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள்,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.  அதனையடுத்து சங்ககிரி மலைடியவாரத்தில் உள்ள தேர்வீதிகள் உள்ள தார் சாலைகள், மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் கான்கீரிட் சாலை மிகவும் மோசடைந்து இரு சக்கர வானங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.  ஆகஸ்ட் 3ம் தேதி அமைச்சர்கள் அந்த சாலைகளின் வழியாக தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்திற்கு செல்ல உள்ளனர்.  அதனையடுத்து இச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் மண் கொட்டி அதில் உள்ள கற்களை அகற்றி தண்ணீர் ஊற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  எனவே இச்சாலைகளை சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம்  புதிதாக செப்பனிட்டும்  கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.