தமிழ்நாடு

உதகை வந்த குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

DIN

4 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை உதகை  வந்தடைந்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வந்துள்ளார். 

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் புதன்கிழமை நடைபெறவுள்ள கலந்தாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள குடியரசுத் தலைவர், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

தொடர்ந்து 6ம் தேதி காலையில் உதகையிலிருந்து கோவை வழியாக தில்லி திரும்புகிறார்.

முன்னதாக சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வந்த குடியரசுத் தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வந்தார். அவரை தமிழக அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

அதேபோல வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன்  மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT