தமிழ்நாடு

அவிநாசியில் திமுக சார்பில் 200 பேருக்கு நிவாரணப் பொருள்கள்: செய்தித் துறை அமைச்சர் வழங்கினார்

DIN

அவிநாசி: அவிநாசியில் திமுக சார்பில் 200 பேருக்கு நிவாரணப் பொருள்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவிநாசி கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், கிராம கோயில் பூசாரிகள், வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட 200 நபர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசி காசிகவுண்டன்புதூரில் நடைபெற்றது.

திமுக மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் சு.செல்வரெங்கம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் அ ராய்பா, வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் சு.பத்மநாபன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 200 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், ஒன்றிய  பொறுப்பாளர்கள் இ.ஆனந்தன், எஸ்.ஆர்.பழனிச்சாமி, சிவபிரகாஷ், க.பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சரவணநம்பி, திருமுருகன்பூண்டி நகர செயலாளர் சு.பாரதி, பொறுப்பாளர்கள் திராவிடன் வஸந்த், ஆனந்தன், குட்டி, எல்.ஐ.சி.அவிநாசியப்பன், விவேக், ராயர் குமார், இரா.மனோகரன் , விக்னேஷ், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT