வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாலாஜா ரோடு ரயில் நிலைய வளாகத்தில் கேபிள் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த சுற்றுச் சுவர் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா ரோடு ரயில் நிலைய பணியாளர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.