முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேட்டி

தமிழகம் முழுவதும் பிராண வாயுவை மக்கள் அதிகம் சுவாசிக்கும் வகையில் நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
ஆய்வுக் கூட்டத்தில் பேசும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்.
பகிர்:

நாமக்கல்: தமிழகம் முழுவதும் பிராண வாயுவை மக்கள் அதிகம் சுவாசிக்கும் வகையில் நாட்டு மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.

நாமக்கல்லில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதில், கோழிப் பண்ணையாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் விளக்கி கூறினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள் நல்ல காற்றை சுவாசிக்கும் வகையில் வேப்பமரம், புளியமரம் போன்ற நாட்டு மரக்கன்றுகளை ஆங்காங்கே நடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் சாயப்பட்டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் தனி மையம் உருவாக்கப்படும். கடந்த ஆட்சியில் எட்டு ஆண்டுகளில் 5.50 கோடி மரக்கன்றுகள் நடுவதாக அறிவிக்கப்பட்டு 5.50 லட்சம் மரக்கன்றுகள் கூட நடப்படவில்லை. ஆனால் ரூ.900 கோடி மரம் நடுவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பச்சை நிற ஒதுக்கீட்டில் உள்ளது. அந்த நிற ஒதுக்கீட்டை வெள்ளை நிற ஒதுக்கீட்டுக்கு மாற்ற வேண்டுமென பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பச்சை நிற ஒதுக்கீடு என்பது அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்டது. வெள்ளை நிற ஒதுக்கீடு என்பது அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருக்கும். எனவே தான் கோழிப்பண்ணையாளர்கள் வெள்ளை நிற ஒதுக்கீட்டை விரும்புகின்றனர். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →