தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை, நீலகிரி, தேனி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!
மேலும், ஏனைய மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.