முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி., மேயர் 

அதிமுகவின் முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் இன்று திமுகவில் இணைந்தனர்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

அதிமுகவின் முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை மாநகர முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் இன்று திமுகவில் இணைந்தனர். 
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இருவரும், தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். 
இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல் வஹாப், எம்.எல்.ஏ, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருநெல்வேலி மாநகரச் செயலாளர் ஏஎல்எஸ்.லெட்சுமணன், ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், பகுதிச் செயலாளர் ரவீந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →