முகப்பு
எஸ்.பி. வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு
தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
எஸ்.பி. வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

அத்துடன் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை, ஊழல் வழக்கு பதிந்துள்ளனர். வேலுமணி சகோதரர் பி.அன்பரசன், ஏ. சந்திரசேகர், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏக் டெக் மெஷினரி, கன்ஸ்டிரானிக்ஸ் இன்ஃப்ரா, கன்ஸ்டிரோமால் (ace tech machinery, constronics infra, constromall) உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீடு உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முழு கட்டுரையைப் படிக்க →