மேற்கு வங்கம் ஆளுநர் ராஜிநாமா!
மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்...
இந்தியாமேற்கு வங்கம் ஆளுநர் ராஜிநாமா!
மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்...
மேற்கு வங்கத்தின் ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5 ) ராஜிநாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்ததற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும், இதுகுறித்து, அவர் தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுபற்றி, முதல்வர் மமதா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“மேற்கு வங்கத்தின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக்குத் தெரிவித்துள்ளார். இதுபற்றி, ஆனந்த போஸ் என்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைத்து மதிப்பிடும் செயல். ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கக் கூடிய ஒருதலைப்பட்ச முடிவுகள் எடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.