தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்: பட்ஜெட்
தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
Advertisement
Advertisement
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
விரிவாகப் படிக்க.. தமிழக நிதிநிலை அறிக்கை - முழு விவரம்
அதில் அவர் அறிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
அதன்படி, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் அமைக்கப்படும்.
சென்னையில் நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்.
நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.