முகப்பு
தமிழ்நாடு

காங்கயம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதி இருவர் பலி

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பைக்கும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மேற்கண்ட இரண்டு வாகனத்தையும் ஓட்டி வந்த இருவரும் உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
கோப்புப் படம்
பகிர்:

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பைக்கும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மேற்கண்ட இரண்டு வாகனத்தையும் ஓட்டி வந்த இருவரும் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). தற்போது காங்கயத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் தங்கிப் பணிபுரிந்து வரும் இவர், திங்கள்கிழமை காலை காங்கயம் அருகே, கோவை சாலையில் மேற்கில் இருந்து காங்கயம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கயம் அருகே, காரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமி (67) என்பவர், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சாலையின் மறுபக்கத்தில், தனது மொபட்டில் வந்து கொண்டிருந்துள்ளார்.

காலை 9.45 மணியளவில் சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே மணிகண்டன் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்த தவறான திசையில் வந்து கொண்டிருந்த கருப்புசாமி, திடீரென தனது வாகனத்தை வேகமாக இடது புறம் திருப்பியபோது, எதிரே வந்து கொண்டிருந்த மணிகண்டனின் பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், கருப்புசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் திருப்பூர் மருத்துவமனையில் முற்பகல் 11.15 மணியளவிலும், கருப்புசாமி கோவை மருத்துவமனையில் மதியம் 12.15 மணியளவிலும் மரணமடைந்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →