தமிழ்நாடு

அர்ச்சகர்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை: அரசு விளக்கம்

DIN

காலியாகவுள்ள அர்ச்சகர்கள், ஓதுவார், பட்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என அனைவரும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அர்ச்சகர்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீதரன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே கோயில் செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவதாக அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே கோயில் செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். 

அடிப்படை கல்வித்தகுதியுடன் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அறநிலையத் துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.

விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கருதினால் இணை ஆணையர், துணை ஆணையரை அணுகலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT